Tuesday, May 8, 2012

சுவாரஸ்யமான அத்யாயம்

இரண்டரை வருடத்திற்கு முன் ஆரம்பித்த 
என் வாழ்வின் முக்கியமான பாடத்தின் 
சுவாரஸ்யமான அத்யாயம் நீ..

வலி

என்னால் எந்த வலியையும் தாங்கிகொள்ள முடியும் 
என்னையே சார்ந்து இருக்கும் உனக்காக,
தளர்ந்து போகும் போது தாங்கி பிடிக்க 
உன் தந்தையின் கைகள் என் பின்னால் 
காத்து இருப்பதால்..

அழகு

என் கணவனின் அழகை ரசிக்கும் நேரம் போக
மீதம் இருக்கும் நேரத்தில் 
வெளி உலகத்தை ரசிக்க செல்வதுண்டு..

இன்றோ உன்னை என் கணவன் கைகளில் 
பார்க்கையில் வேறு எதுவும் 
அந்த அழகை மிஞ்ச இல்லையடி வெளி உலகில்..


புரட்டி போடும் உறவு

வாழ்கையை புரட்டி போடும் உறவு கல்யாணம் 
மட்டும் தான் என நினைத்திருந்தேன் 
நீ என் கைகளில் கிடைக்கும் வரை..

Saturday, May 5, 2012

பொக்கிஷம்

சில்லறைகள்  பார்த்து அதிர்ஷ்டசாலி 
என நினைத்தவள் கையில் கிடைத்த
தங்க பொக்கிஷம் தானடி நீ எனக்கு..

punnagai

நீ கண்விழிக்கும் வரை உன் அருகே  காத்திருக்கிறேன் 
பளிச்சென்று நீ வீசும் புன்னகைக்காக..

நீ புன்னகைத்த அந்த நொடி
என் வாழ்கையின் அர்த்தம் உணர்ந்தவளாய் 
உணர்கிறேநடி ..

Thaai pal

oru nodi kooda manam anumadhika marukiradhu
en rathathai palaki unaku tharuvadhai thavira
veredhuvum unaku koduka..

ஈசல்


வெளிச்சத்தை நோக்கி ஓடும் ஈசல் போல்
என் வாழ்கைக்கு,
புது வெளிச்சம் தந்த
உன்னை நோக்கியே ஓடுகிறதடி
என் நாட்கள்..