Thursday, October 4, 2012

ஆட்டு குட்டி

நீ ஒவ்வொரு மைல்கல்லில் அடியெடுத்து வைக்கையிலும்
ஆனந்தத்தில் ஆட்டு குட்டியாய் குதிகிறதடி
என் மனம் ..

வேறென்ன வேலை


என்னை தேடி தவழ்ந்து  வந்து என் கால்களை
இறுக கட்டிகொல்கயில்
உலகில் வேறெதுவும் முக்கியமான வேலை  இல்லை
உன்னை கட்டி அணைத்து முத்தமிடுவதை தவிர..



Tuesday, May 8, 2012

சுவாரஸ்யமான அத்யாயம்

இரண்டரை வருடத்திற்கு முன் ஆரம்பித்த 
என் வாழ்வின் முக்கியமான பாடத்தின் 
சுவாரஸ்யமான அத்யாயம் நீ..

வலி

என்னால் எந்த வலியையும் தாங்கிகொள்ள முடியும் 
என்னையே சார்ந்து இருக்கும் உனக்காக,
தளர்ந்து போகும் போது தாங்கி பிடிக்க 
உன் தந்தையின் கைகள் என் பின்னால் 
காத்து இருப்பதால்..

அழகு

என் கணவனின் அழகை ரசிக்கும் நேரம் போக
மீதம் இருக்கும் நேரத்தில் 
வெளி உலகத்தை ரசிக்க செல்வதுண்டு..

இன்றோ உன்னை என் கணவன் கைகளில் 
பார்க்கையில் வேறு எதுவும் 
அந்த அழகை மிஞ்ச இல்லையடி வெளி உலகில்..


புரட்டி போடும் உறவு

வாழ்கையை புரட்டி போடும் உறவு கல்யாணம் 
மட்டும் தான் என நினைத்திருந்தேன் 
நீ என் கைகளில் கிடைக்கும் வரை..

Saturday, May 5, 2012

பொக்கிஷம்

சில்லறைகள்  பார்த்து அதிர்ஷ்டசாலி 
என நினைத்தவள் கையில் கிடைத்த
தங்க பொக்கிஷம் தானடி நீ எனக்கு..